https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-1333471348635815 கங்கத்தலாவ ஐக்கிய ஊடக ஒன்றியத்தின் மூன்றாவது அகவை.

கங்கத்தலாவ ஐக்கிய ஊடக ஒன்றியத்தின் மூன்றாவது அகவை.



திருகோணமலை மாவட்ட கங்கத்தலாவ ஐக்கிய ஊடக ஒன்றியமானது, தனது மூன்றாவது அகவையை இன்று (2024.07.02) நிறைவு செய்து, நான்காம் ஆண்டில் கால்பதித்திருக்கிறது.



இதனையொட்டி, ஒன்றியத்தின் பிரதான நிகழ்வு இன்று(2) மூதூர் கங்கை கடற்கரை ஹோட்டலில், அதன் தலைவர் அமதுரு அமரஜீவ தலைமையில் நடைபெற்றது.



இந்த வைபவத்தில், கிழக்கு மாகாண கல்வி அமைச்சின்
செயலாளர் ஜி. திசாநாயக்க பிரதம விருந்தினராகவும், சிறப்பு விருந்தினர்களாக குறிஞ்சாகேணி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ. எம். எம். அஜித் மற்றும் அகம் நிறுவனத்தின் பணிப்பாளர்
லாகுவராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.



இதன் போது, மூன்று ஆண்டுகள் பல சவால்களைக் கடந்து வெற்றியுடன் பயணித்து, நான்காம் ஆண்டில் இந்த ஒன்றியம் கால்பதித்திருக்கிறது. இந்த நிலையில், திருகோணமலை மாவட்டத்தில் பல்வேறு அரசியல், சமூக பிரச்சினைகளை தீர்ப்பதில் இவ் ஊடக ஒன்றியமானது முன்னின்று செயற்படுவதாகவும், தைரியமாக விமர்சனங்களை முன்வைப்பதுடன் நடுநிலமையாக செயற்படும் ஊடகவியலாளர்களை கொண்ட அமைப்பாக செயற்பட்டு வருகின்றது என தங்களுடைய வாழ்த்துக்களை அதிதிகள் தெரிவித்துக் கொண்டனர் .




இந்த நிகழ்வில், ஊடகவியலாளர்களுக்கு புதிய டீ சேர்ட் அறிமுகப்படுத்தப்பட்டதோடு, ஊடக உபகரணங்களும் அவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.

Post a Comment

Previous Post Next Post