கிண்ணியா ஜாவா பள்ளிவாயலின் நவீன முறையில் வடிவமைக்கப்பட்ட டிஜிட்டல் பெயர் பலகை நேற்று (5) திறந்து வைக்கப்பட்டது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் முக்கிய பிரமுகரும் பிரபல தொழிலதிபரும் சமூக சேவையாளருமான முஸ்லிமின் ஹாஜியார் மஸாஹிரினால் இது திறந்து வைக்கப்பட்டது.
170, 000 ரூபா செலவில் தயாரிக்கப்பட்ட இந்த பெயர் பலகையை தனது தந்தையான முஸ்லிமின் ஹாஜியாரின் பெயரால் அன்பளிப்பு செய்துள்ளார்.
இந்த வைபவத்தில் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப், பள்ளிவாயல் நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.




Post a Comment