https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-1333471348635815 கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளருக்கு கொலை அச்சுறுத்தல்; ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளருக்கு கொலை அச்சுறுத்தல்; ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

 




கிண்ணியா வலய கல்வி பணிப்பாளருக்கு ஆசிரியர் ஒருவரால் விடுக்கப்பட்ட கொலை அச்சுறுத்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, வலயக்கல்வி அலுவலக ஊழியர்கள் இன்று (10) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.



 

பெற்றோர்களே சமூக அமைப்புகளே விழித்தெழுங்கள்! கல்வி அபிவிருத்தியை தடை செய்யாதே! பிரதேசத்தின் கல்வியை சீரழிக்க தனிநபருக்கு இடம் அளிக்க முடியாது! தீய சக்திகளின் சூழ்ச்சிக்கு ஆளாக முடியாது! கூட இருந்து குழி பறிப்பவர்களுக்கு இடம் அளிக்க முடியாது! போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்


 



கிண்ணியா பாடசாலையைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர், வலய கல்வி பணிப்பாளரை நேரடியாகச் சந்தித்து கொலை அச்சுறுத்தல்விடுத்ததாகவும், மேலும் இந்த கொலை அச்சுறுத்தல் குறித்து, குறித்த ஆசிரியர் கிழக்கு மாகாண பணிப்பாளருக்கு தொலைபேசி மூலம் தெரிவித்திருந்ததாகவும் கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் வலயக் கல்விப் பணிப்பாளரால் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





 


Post a Comment

Previous Post Next Post