https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-1333471348635815 கிண்ணியா வலய 66 பாடசாலைகள் இன்று இயங்கவில்லை.

கிண்ணியா வலய 66 பாடசாலைகள் இன்று இயங்கவில்லை.

 



 (கியாஸ் ஷாபி) 

கிண்ணியா பிரதேச   அதிபர், ஆசிரியர்கள் எரிபொருள் கோரி, இன்று(25) வேலை நிறுத்த போராட்டத்தில்  ஈடுபட்டதால், இந்த
கல்வி வலயத்தில் உள்ள 66 பாடசாலைகளும் இயங்கவில்லை.  

இது தொடர்பாக, கிண்ணியா அதிபர்கள் சங்கத் தலைவர் எம்.எம். எம். முஸம்மில் கருத்து தெரிவிக்கையில்,

அதிபர், ஆசிரிய எரிபொருள் பெற்றுக் கொள்வதற்கு  பொருத்தமான உரிய ஏற்பாடுகளை செய்து தருமாறு, பிரதேச செயலாளர்,  மாவட்ட செயலாளர் ஆகியோருக்கு பலமுறை கோரிக்கை விடுத்திருந்தோம். மேலும்
கவன ஈர்ப்புப் போராட்டங்களையும் நடாத்தியிருந்தோம் . எனினும் இது தொடர்பாக எந்த ஒரு சாதகமான முன்னெடுப்புக்களும் மேற்கொள்ளப்படவில்லை.

கிண்ணியா பிரதேசத்தில் சுமார் 40க்கும் மேற்பட்ட பாடசாலைகள் கஷ்ட மற்றும் அதிகஷ்ட கிராமப்புறங்களில் அமைந்துள்ளன.

அதிபர், ஆசிரியர்கள் தொடர்ந்து, எரிபொருள் நிலையங்களில் அவமானப் படுத்தப்பட்டு வருகின்றார்கள். எனவே, கல்வி அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட வேண்டும். இல்லையென்றால், அதிபர், ஆசிரியர்கள் எரிபொருட்களைப் பெற்றுக் கொள்வதற்கு பிரத்தியேக வசதிகளை செய்து தர வேண்டும்   
என்று அவர்  தெரிவித்தார்.

அதிபர், ஆசிரியர்கள் பெற்றோல் இல்லாமையால் பாடசாலைக்கு வரமுடியவில்லை" என்று தங்களுடைய லீவை அறிவித்திருக்கிறார். இதேவேளை,  பாடசாலைக்கு அண்மையில் உள்ள ஆசிரியர்கள்  சுகவீன  லீவு பெற்றிருக்கிறார். இது நேற்று (24) நடைபெற்ற அதிபர் சங்க கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம். 

இது மாணவருடைய நலனுக்காக மேற்கொள்ளப்பட்ட தீர்மானமாகும். மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக சீராக கொண்டு செல்வதற்கு அதிபர், ஆசிரியர்களுக்கான வசதிகளை அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.  

Post a Comment

Previous Post Next Post