(கியாஸ் ஷாபி)
கிண்ணியா வலய அதிபர், ஆசிரியர்கள் எரிபொருள் கோரி, நாளை வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என்று தீர்மானித்துள்ளனர்.
இது தொடர்பாக, கிண்ணியா அதிபர்கள் சங்கத் தலைவர் எம்.எம்.எம். முஸம்மில் கருத்து தெரிவிக்கையில்
அதிபர், ஆசிரியர்களுக்கு பெற்றோல் கோரி நாளை பாடசாலைக்கு செல்வதில்லை என்று, இன்று நடைபெற்ற அதிபர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பாக whatsapp மூலம் ஆசிரியர்களுக்கு தெரியப்படுத்தி, சகல ஆசிரியர்களும் அதிபர்களின் கையடக்க தொலைபேசிகளுக்கு "பெற்றோல் இல்லாமையால் பாடசாலைக்கு வரமுடியவில்லை" என்று குறுஞ்செய்தி அனுப்புவதென்றும் பாடசாலைக்கு அண்மையில் உள்ள ஆசிரியர்கள் சுகவீன லீவு எடுப்பதென்றும் தீர்மானிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
நாளை பாடசாலைக்கு ஆசிரியர்கள் லீவு என்பதை மாணவர்களுக்கு வகுப்பாசிரியர்களுக் ஊடாக தெரியப்படுத்துவதோடு, அதிபர்கள் தங்கள் கோட்டக்கல்வி பணிப்பாளர்களுக்கு "பெற்றோல் இன்மையால் பாடசாலைக்கு வரமுடியவில்லை" என்று குறுஞ்செய்தி மூலம் மூலம் லீவு அறிவிப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
அதிபர் ஆசிரியர்கள் தொடர்ந்து, எரிபொருள் நிலையங்களில் அவமானப் படுத்தப்பட்டு வருகின்றார்கள். எனவே, கல்வி அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட வேண்டும். இல்லையென்றால், அதிபர், ஆசிரியர்கள் எரிபொருட்களைப் பெற்றுக் கொள்வதற்கு பிரத்தியேக வசதிகளை செய்து தர வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment