https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-1333471348635815 பெண்களை வலுப்படுத்துவதற்காக திருகோணமலையில் வர்த்தக கண்காட்சி

பெண்களை வலுப்படுத்துவதற்காக திருகோணமலையில் வர்த்தக கண்காட்சி

 


பெண்களை வலுப்படுத்துவதற்காக வர்த்தக கண்காட்சி மற்றும் புத்தாக்க நிகழ்வுகள் இன்று திருகோணமலை மாவட்ட செயலகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டன.


திருகோணமலை மாவட்டத்திற்கான சர்வதேச மகளிர் தின நிகழ்வை ஒட்டி மாவட்ட செயலாளர் BHN.JAYAWIKRAMA தலைமையில் மிகப் பிரமாண்டமாக நடைபெற்றன.


கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹமத் மற்றும் திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபில நுவான் அத்துக்கோரல்ல ஆகியோர் நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர்.


சுவிசலாந்து மற்றும் ஜெர்மனி நாடுகளின் தூதரலாயத்தின் நிதி உதவியுடன் வர்த்தக கண்காட்சியும் புத்தாக்க நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டன.


கிழக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலகம், திருகோணாமலை மாவட்ட செயலகம், ஜி .ரி. செட் ஜெர்மன் கார்ப்பரேஷன், நியூ கிளிஸ் மன்றம் ஆகிய இணைந்து பெண்களை வலுவூட்டும் இன் நிகழ்வுகளை ஆரம்பித்தன.




இதில் பாடசாலை மாணவர்கள் மற்றும் நிறுவனங்களின் புத்தாக்க நிகழ்ச்சிகளும் காட்சிப்படுத்தப்பட்டன.

பெண்கள் மற்றும் சுயதொழில் முயற்சியாலர்களின் விற்பனை முகவர் நிலையங்களும் காணப்பட்டன.


மத்திய மாகாணத்தை சேர்ந்த முப்பதுக்கு மேற்பட்ட தொழில் முயற்சியாளர்கள் இதில் பங்கு கொண்டதுடன் திருகோணாமலை மாவட்டம் மற்றும் கிழக்கு மாகாண தொழில் முயற்சியளர்களும் பங்கு கொண்டனர்.

டிஜிட்டல் வலயம் தகவல் தொழில்நுட்ப சம்பந்தமான கண்காட்சி கூடங்கள் என்பனவும் அமைக்கப்பட்டு காணப்பட்டன.




மொத்தமாக இங்கு 68 கூடாரங்கள் அமைக்கப்பட்டு காட்சிகள் நடைபெற்றன.

நிகழ்வை அடுத்து மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் அதி திகளினால் IT4 Girls என்ற வேலை திட்டத்தை நிறைவு செய்த 24 யுவதிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் மற்றும் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த 30க்கு மேற்பட்ட தொழில் முயற்சிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றன.




Post a Comment

Previous Post Next Post