https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-1333471348635815 ஜனாதிபதி இப்ராஹிம் ரயீஸின் ஆத்ம சாந்திக்காக கிண்ணியாவில் விசேட நிகழ்வுகள்.

ஜனாதிபதி இப்ராஹிம் ரயீஸின் ஆத்ம சாந்திக்காக கிண்ணியாவில் விசேட நிகழ்வுகள்.

 


ஈரான் இஸ்லாமிய குடியரசின் ஜனாதிபதி மர்ஹூம் இப்ராஹிம் ரயீஸின் ஆத்ம சாந்திக்காக கிண்ணியாவில் விசேட நிகழ்வுகள்



ஈரான் இஸ்லாமிய குடியரசின் ஜனாதிபதி மர்ஹூம் இப்ராஹிம் ரயீஸின் ஆத்ம சாந்திக்காக ஏற்பாடு செய்யப்பட்ட, கத்தமுல் குர்ஆன் வைபவமும் விசேட துஆ பிரார்த்தனையும் வியாழன் (27) கிண்ணியா விஷன் மண்டபத்தில் இடம்பெற்றது.



கிண்ணியா மனித நேயத்துக்கான சமூக ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வானது, திருகோணமலை மாவட்ட சமாதான நீதவான்களின் ஒன்றியத் தலைவர் கலாநிதி ஹனிபா சஹீட் தலைமையில் நடைபெற்றது. வரவேற்புரையை சிரேஷ்ட பிரஜைகள் சங்கத் தலைவர் எம். ரீ.சபிறுள்ளாகான் நிகழ்த்தினார்.



இந்த நிகழ்வில், பாலஸ்தீன காசா முஸ்லிம்களின் நலனுக்காகவும் துஆ பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டது.


இதன் போது, விசேட பேச்சாளராக கலந்து கொண்ட சட்டத்தரணி மர்சூம் மௌலான கருத்து தெரிவிக்கையில்,

பாலஸ்தீன மக்களுக்காக உள்ளத்தால் என்றும் நேயம் கொண்ட, மறைந்த ஈரான் ஜனாதிபதி மறுகும் இப்ராஹிம் ரைஸின் நினைவேந்தலோடு சேர்த்து கிண்ணியா மண்ணில், பலஸ்தீன மக்களுக்காகவும் பிரார்த்தனை நிகழ்வையும் ஏற்பாடு செய்திருப்பது இந்த மக்களின் பெருந்தன்மையின் வெளிப்பாட்டை எடுத்துக்காட்டுகிறது.


இலங்கை பௌத்த தர்மம், இந்து தர்மம், இஸ்லாமிய தர்மம், கிறிஸ்தவ தர்மம் ஆகியவற்றை போற்றி போசித்து பராமரிக்கின்ற ஒரு சமநிலை தேசமாக எப்பொழுதும் இருந்து வந்திருக்கின்றது, அது நீண்ட மரபினைக் கொண்டது. அந்த வழியில் இப்ராஹீம் றைஸிக்காகவும் பலஸ்தீன மக்களுக்காகவும் உறுதியான வெளியுறவுக் கொள்கையை இலங்கை கடைப்பிடித்து வந்திருக்கின்றது. அதற்காக நாங்கள் இந்த நாட்டினுடைய ஜனாதிபதிக்கும் அரசுக்கும் நன்றி கூற கடமைப்பட்டிருக்கின்றோம் என்று சட்டத்தரணி மர்சூம் மௌலான தெரிவித்தார்.



இலங்கை முஸ்லிம் சமூகம் உள்ளக முரண்பாடுகளை மறந்து, சகோதரத்துவ வாஞ்சனையோடு வாழ வேண்டிய தேவையை ஒவ்வொருவரும் உணர்வு பூர்வமாக உணர வேண்டும். ஈரான் ஜனாதிபதியின் மறைவையொட்டி, தன்சல் வழங்கி,அன்னதானம் செய்து நன்றி செலுத்திய பெரும்பான்மை சகோதர சமூகத்தை இந்த சந்தர்ப்பத்தில் நினைவு கூறுகின்றேன் என்று மேலும் அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் உலமாக்கள், சமூக அமைப்புக்களின் தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர். 



Post a Comment

Previous Post Next Post