உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு கிண்ணியா மத்திய கல்லூரி ஒழுங்கு செய்திருந்த விசேட சுற்றாடல் பாதுகாப்பு வேலைத் திட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை (04) கல்லூரி முதல்வர் M.H.M.நஜாத் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, சுற்றாடல் விழிப்புணர்வு குறித்து மாணவர்களால் வீதி ஊர்வலம் நடத்தப்பட்டதோடு, மரக்கன்றுகள் நடப்பட்டு வடிகான்களும் புறச்சூழல்களும் விசேடமாக சுத்திகரிப்பு செய்யப்பட்டன.
இந்நிகழ்வில் கிண்ணியா பிரதேச செயலாளர் எம். எச்.முகம்மது கனி, பிரதேச செயலக சுற்றாடல் உத்தியோகத்தர்கள், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.




Post a Comment