https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-1333471348635815 சர்வோதய ஸ்தாபகர் கலாநிதி ஏ. டி. ஆரியரட்னவின் நினைவு தின நிகழ்வு

சர்வோதய ஸ்தாபகர் கலாநிதி ஏ. டி. ஆரியரட்னவின் நினைவு தின நிகழ்வு


மறைந்த சர்வோதய ஸ்தாபகர் கலாநிதி ஏ. டி. ஆரியரட்னவின் நினைவு தின நிகழ்வு நேற்று(18) திருகோணமலை சர்வோதய நிலையத்தில் இடம்பெற்றது.


திருகோணமலை மாவட்ட ஐக்கிய சமயங்களின் அமைப்பினால் (URI) ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வு, அதன் தலைவர் ஏ. சுப்ரமணிய சர்மா தலைமையில் இடம்பெற்றது.


இதன்போது, சுப்ரமணிய சர்மா கருத்து தெரிவிக்கையில், தனது 93 வது வயதில் காலமான கலாநிதி ஆரியரட்ன அவர்கள் 1958 ஆம் ஆண்டு சர்வோதய அமைப்பை உருவாக்கி இற்றை வரை நாடு பூராகவும் சகல இனங்களையும் இணைத்துக் கொண்டு பயணித்தார் என்பது வெள்ளிடை மலையாகும் என்று தெரிவித்தார்.


திருகோணமலை மாவட்ட ஐக்கிய சமயங்களின் அமைப்பின் செயலாளர் எம்.வை. ஹதியத்துல்லாஹ் உரையாற்றும் போது, தூய சிந்தனையுடன் அமைக்கப்பட்ட இவ் அமைப்பு அரசியலுக்கப்பால் தனித்தன்மையுடன் இயங்கியதாலேயே இற்றை வரை அழியாமல், வெவ்வேறு குழுக்களாகப் பிரியாமல் நம் நாட்டில் தலை நிமிர்ந்து நிற்கின்றது என்றும் மனிதத்தை கட்டிக் காத்த மாமனிதன் DR, ஆரியரட்ன என்றால் மாற்றுக் கருத்துக்கு இடம் இருக்காது என்றும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில், சர்வோதய மாவட்ட இணைப்பாளர் பத்மினி, மாவட்ட ஐக்கிய சமயங்களின் அமைப்பின் இணைப்பாளர் கலைவர்னன், சர்வோதய பணியாளர்கள் மற்றும் மாவட்ட ஐக்கிய சமயங்களின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.


Post a Comment

Previous Post Next Post