https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-1333471348635815 கிழக்கு மாகாண முஸ்லிம்களின் அரசியல் அடையாளத்துக்காக அயராது உழைத்தவர் மர்ஹும் நஜீப் அப்துல் மஜீத்!

கிழக்கு மாகாண முஸ்லிம்களின் அரசியல் அடையாளத்துக்காக அயராது உழைத்தவர் மர்ஹும் நஜீப் அப்துல் மஜீத்!





தனது தந்தையின் அரசியல் பாசறையில் வளர்ந்து, தலைவர் மர்ஹூம் எம்.எச். எம். அஷ்ரப் உடைய அரசியல் ஆளுமையுடன் இணைந்து, முஸ்லிம்களுக்காக மாத்திரமன்றி, முழு முழுநாட்டின் முஸ்லிம்களின் அரசியல் அடையாளத்துக்காக அயராது உழைத்தவர்தான் மர்ஹும் நஜீப் அப்துல் மஜீத் என, பாராளுமன்ற உறுப்பினரும் திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி குழு இணைத் தலைவருமான ஏ. எல். எம். அதாவுல்லா தெரிவித்தார்.



கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் மர்ஹூம் நஜீப் அப்துல் மஜீதின் ஞாபகார்த்த வைபவம் ஒன்று, கிண்ணியா நத்துவத்தில் அரபுக் கல்லூரியில் சனிக்கிழமை(17) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கலந்து கொண்டு, இரங்கல் உரை நிகழ்த்துகையிலேயே அவர், இவ்வாறு தெரிவித்தார்.


அவர் மேலும் அங்கு கருத்து தெரிவிக்கையில், திருகோணமலை மாவட்டத்தில் எந்தவித இனப் பாகுபாடும் இன்றி,சேவை செய்து, நவீன அரசியலுக்கு ஒரு பிதாமகனாக வாழ்ந்து காட்டியவர்.


அரசியலில் பல்வேறு சேவைகளை ஆற்றிய இவர், அவருடைய அரசியல் பயணத்தில், கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டது மாத்திரமன்றி, தேசிய காங்கிரஸின் பிரதித் தலைவராகவும் பணியாற்றினார். இன்றும் கூட தேர்தல் ஆணையத்தில் பிரதித் தலைவர் பதவியில் அவருடைய பெயர்தான் இன்னும் இருக்கின்றது.


அவர் விட்டுச் சென்ற பணியை தொடர்வதற்கு எங்கள் ஒவ்வொருவருக்கும் பொறுப்புக்கள் இருக்கின்றன. அவர் இறைவனுக்காக பயந்து, இஸ்லாமிய நெறிமுறைகளை பின்பற்றி, அரசியல் செய்து எமக்கெல்லாம் ஒரு முன்மாதிரியாக திகழ்ந்தார். எந்த சந்தர்ப்பத்திலும் லஞ்சம், ஊழல் குரோதம் போன்ற அரசியல் சாக்கடையிலிருந்து அவர் விலகி இருந்தார். இவருடைய அரசியல் பணிகளை இறைவன் பொருந்திக் கொண்டு, அண்ணாருடைய சுவன வாழ்வுக்காக இறைவன் கிருபை செய்ய வேண்டும் என, நாம் எல்லோரும் பிரார்த்திக்க வேண்டும் என தெரிவித்தார்.



இந்த வைப்பவத்தில், மர்ஹும் நஜீப் அப்துல் மஜீத் விட்டுச் சென்ற அரசியல் பணி தொடர்பாக பலரும் உரையாற்றியதோடு, அன்னாரின் ஈடேற்றத்திற்காக, குர்ஆன் தமாம் செய்யப்பட்டு , விசேட துவா பிரார்த்தனைளும் இடம்பெற்றன.


கிண்ணியா நத்துவதில் உள்ள அரபுக் கல்லூரியின் தலைவர்,

எஸ். எம். முஜீப் ஜெராரி தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில், உலமாக்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.




Post a Comment

Previous Post Next Post