https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-1333471348635815 கிண்ணியாவில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரிசி வழங்கி வைப்பு!

கிண்ணியாவில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரிசி வழங்கி வைப்பு!

 

 




2023 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் நாட்டில் நிலவிய பொருளாதார நெருக்கடியினால் பாதிப்புக்கு உள்ளான குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் ஊட்டச்சத்து மட்டத்தைப் பேணுவதற்கான தேசிய வேலைத் திட்டத்தின் கீழ், கிண்ணியா பிரதேச செயலக பிரிவில் அரிசி வழங்கும் நிகழ்வு இன்று(23) இடம்பெற்றது.


குறித்த நிகழ்வானது, கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.முஹம்மது கனி தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.



இதன் போது, பிரதேச செயலாளர் கருத்து தெரிவிக்கையில்,

இந்தத் திட்டத்தின் கீழ், கிண்ணியா பிரதேச செயலக பிரிவில், சுமார் 17970 ற்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு அரிசி விநியோகம் மேற்கொள்ளப்படவுள்ளது.

இதன் முதற்கட்டமாக ஆலங்கேணி, ஈச்சம்தீவு, குட்டிக்கராச்சி மற்றும் கிண்ணியா ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் 220 குடும்பங்களுக்கு இன்று அரிசி விநியோகிக்கப்பட உள்ளது.



சமுர்த்தி பயனாளிகள், சமுர்த்தி கொடுப்பனவுக்காக காத்திருப்போர் பட்டியலிலுள்ள குடும்பங்கள், முதியோர் கொடுப்பனவு பெறுவோர், விசேட தேவையுடையோர் கொடுப்பனவு பெறுவோர், அஸ்வெஸ்ம மற்றும் மேன்முறையீடு செய்து வருமானம் குறைந்த தகுதியினை உடைய பயனாளிகள் ஆகியோருக்கு இந்த இலவச அரிசி விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு,

இரண்டு மாதங்களுக்கு தலா 10 கிலோ அரிசி என்ற அடிப்படையில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.



இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிண்ணியா பிரதேச ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம் அதாவுல்லாஹ் கலந்து கொண்டிருந்தார்.

இதன் போது பாராளுமன்ற உறுப்பினர் கருத்து தெரிவிக்கையில், கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மாவட்டம் அனைத்து வளங்களையும் கொண்டிருக்கின்றன. திருகோணமலையில் இருந்து வெளிநாடுகளுக்கு ஒரு காலத்தில் அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டது. அதேபோன்று கனியங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டது. சர்வதேச வர்த்தகத்துக்கான முக்கிய தலங்கள் திருகோணமலையில் உள்ளன.


நாட்டின் முக்கியமான இக்கட்டான கட்டத்தில், தலைமைத்துவத்தை பொறுப்பெடுத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் இந்த நாட்டை பொருளாதார ரீதியாக நிமிர்த்தி உள்ளார். அவருடைய சிந்தனையும் அவருடைய அரசியல் அனுபவமும் எங்களுக்கு கிடைத்திருக்காவிட்டால் இந்த நாடு மேலும் குட்டிச்சுவர் ஆகியிருக்கும் என்று தெரிவித்தார்.



Post a Comment

Previous Post Next Post