கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் மர்ஹூம் நஜீப் அப்துல் மஜீதின் புதல்வர் நஜீப் முஹம்மட் முதல் தடவையாக பொது நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டமையானது கிண்ணியா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மர்ஹூம் நஜீப் அப்துல் மஜீதின் ஞாபகார்த்தமாக, அவரது குடும்ப உறுப்பினர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு ஒன்று சனிக்கிழமை(17) கிண்ணியா நத்வத்துல் புஹாரி அரபுக் கல்லூரியில் நடைபெற்றது.
இந்த வைபவத்தில், நஜீப் அப்துல் மஜீத்தின் அரசியல் வாரிசாக, இவர் ஆதரவாளர்களால் நோக்கப்பட்டமையை அவதானிக்க கூடியதாக இருந்தது.
ஒரு பொது நிகழ்வொன்றில், நஜீப் முஹம்மதின் திடீர் பிரசன்னம் இவ்வாறான நிலையை ஏற்படுத்தியிருந்தது.
திருகோணமலை மாவட்ட அரசியலில், நிச்சயம் ஒரு இது ஒரு சலசலப்பு ஏற்படுத்தக்கூடிய விடயமாகும்.
ஏனெனில், இந்த வைபவத்தில் கலந்து கொண்டு, இரங்கல் உரையை நிகழ்த்திய பாராளுமன்ற உறுப்பினர் அத்தாவுல்லாவின் உரையும் இதனை உறுதி செய்யக் கூடியதாக இருந்தது.
அவர் தனது உரையில், நஜீப் அப்துல் மஜீத் இறுதியாக பாராளுமன்றத் தேர்தலில் தேசிய காங்கிரஸில் போட்டியிட்டதை நினைவு படுத்தியிருந்தார்.
மேலும், எமது கட்சியின் மூலம் அந்தத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான அதிகபட்ச வாய்ப்புகள் அவருக்கு இருந்தது. எனினும், துரதிஷ்டவசமாக வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதால், அந்த வாய்ப்பை இழக்க நேரிட்டது என்றும் தெரிவித்தார்.
அத்தோடு, அவர் பேசிய காங்கிரஸின் பிரதி தலைவர் என்பதையும், தேர்தல் ஆணையத்தில் இன்னும் பிரதி தலைவராக அவருடைய பெயரே இருப்பதாகவும் தெரிவித்தும் இருந்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் அத்தாவுல்லாவின் இந்த உரையில், நஜீப் அப்துல் மஜீத் உடைய அரசியல் வாரிசாக, அவரது மகனை தேசிய காங்கிரஸ் மூலம் அறிமுகப்படுத்துவதற்கான பின்புலம் தெரிவதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.





Post a Comment