https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-1333471348635815 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான கௌரவிப்பு விழா..!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான கௌரவிப்பு விழா..!

 



(எஸ். சினீஸ் கான்)


மூதூர் புர்க்கானியா வித்தியாலயத்தின் 2023 ம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பரிசில் வழங்கலும் கௌரவிப்பும் பாடசாலையின் அதிபர் இம்ரான் தலைமையில் சனிக்கிழமை (17) நடைபெற்றது.


நிகழ்வின் பிரதம அதிதியாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக் கலந்துகொண்டதுடன், வலயக்கல்வி பணிமனையின் உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் நலன்விரும்பிகளும் கலந்து சிறப்பித்தனர்.


மேலும், வெகு விமர்சையாக நடைபெற்ற இந் நிகழ்வில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவப்படுத்தி பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன.

Post a Comment

Previous Post Next Post