இலங்கை இனப் பிரச்சனைக்கான தீர்வும் கிழக்கு மாகாண முஸ்லிம்களும் என்ற தொனிப் பொருளில், அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்ட முஸ்லிம் சிவில் அமைப்புகளின் ஒன்றுகூடல் ஒன்று எதிர்வரும் 26.08. 2023 (சனிக்கிழமை) திகதி கிண்ணியாவில் இடம் பெறவுள்ளது.
இலங்கையின் இனப் பிரச்சினைத் தீர்வு தொடர்பிலும் அரசியலமைப்பின் 13 வது திருத்தத்தினை அமல்படுத்துவது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.
கிண்ணியா மஜ்லிஸ் சூரா சபை ஏற்பாட்டில், இந்நிகழ்வு நடைபெற உள்ளது.
முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட கிழக்கு மாகாண முஸ்லிம்களின் அபிலாசைகள், தேவைகள், எதிர்பார்ப்புகள் என்பன இந்த தீர்வு திட்டத்தில் உள்வாங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் கிழக்கு மாகாண முஸ்லிம்கள் தொடர்பில் அரசாங்கம் அக்கறை செலுத்த வேண்டும் என்கின்ற கோரிக்கையின் அடிப்படையிலும் இந்த ஒன்று கூடல் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக கிண்ணியா சூரா சபையின் தலைவர் ஏ.ஆர்.எம். பரீட் தெரிவித்தார்.

Post a Comment