https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-1333471348635815 கிண்ணியா மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கிவைப்பு.

கிண்ணியா மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கிவைப்பு.




கிண்ணியா வலயக் கல்வி பிரிவுக்குட்பட்ட இரு பாடசாலைகளில் 13 வருட உத்தரவாதப்படுத்தப்பட்ட கல்வித் திட்டத்தின் கீழ், பிரயோகத் தோற்ற கற்கையினை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் வைபவம் நேற்று (19) கிண்ணியா வலயக்கல்வி அலுவலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.





வலயக்கல்வி பணிப்பாளர் ஏ. நசூகர்கான் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில், கிண்ணியா மத்திய கல்லூரி மற்றும் கிண்ணியா மகளிர் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளைச் சேர்ந்த 42 மாணவர்கள் இந்தச் சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டனர்.







இந்த வைபவத்தில், கிண்ணியா வலயக்கல்வி அலுவலகப் பிரதிக் கல்வி பணிப்பாளர் முகம்மது சிராஜ் வலயக்கல்வி அலுவலக 13 வருட உத்தரவாத கல்வித் திட்ட இணைப்பாளர் ஏ. எல். மபாஹிர், இந்தியா மத்திய கல்லூரி அதிபர் எம். முளவ்பர், கிண்ணியா மத்திய கல்லூரியின் 13 வருட உத்தரவாத கல்வித் திட்டத இணைப்பாளர் எம். எம். முனீஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.







Post a Comment

Previous Post Next Post