https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-1333471348635815 கிண்ணியாவின் பொதுப் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடல்.

கிண்ணியாவின் பொதுப் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடல்.


திருகோணமலை எழுத்தாணி கலை பேரவையினால், ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கும் சிவில் சமூக பிரதிநிதிகளுக்கும் இடையே தொடர்பாடலை அதிகரிக்கும் அறிவூட்டல் செயலமர்வு கிண்ணியா விஷன் கேட்போர் கூடத்தில் நேற்று (20) இடம்பெற்றது.



பொதுமக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை வெளிக்கொணர்தல் செயற்றிட்டத்தின் இன்னுமொரு நடவடிக்கையாக, திருகோணமலை எழுத்தாணி அமைப்பினால் இச்செயலமர்வு முன்னெடுக்கப்படுகிறது.



இந்த செயலமர்வில், கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவில் உள்ள 11 கிராம சேவகர் பிரிவிலிருந்தும் 30 மக்கள் பிரதிநிதிகள் அழைக்கப்பட்டிருந்தனர்.

 



விவசாய சங்க உறுப்பினர்கள், மீனவர் சங்க உறுப்பினர்கள், மகளிர் சங்க உறுப்பினர்கள், மாற்றுத்திறனாளிகள், கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் இதில் உள்ளடக்கப்பட்டிருந்தனர்.



இவர்கள் ஐந்து குழுக்களாக பிரிக்கப்பட்டு, தங்களுடைய பிரதேசத்தில் காணப்படுகின்ற முக்கிய பிரச்சனைகளை அடையாளப்படுத்தி, ஊடகவியலாளர் மத்தியில் முன் வைப்பதற்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட்டது.




போக்குவரத்து பிரச்சனை, போதைப் பொருள் பாவனைப் பிரச்சினை, விதவைகள் எதிர் நோக்கும் பிரச்சினை, காட்டு யானைகளின் பிரச்சனை, செங்கல் உற்பத்தியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனை, நன்னீர் மீன்வளப்பாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் கடல் அரிப்பு பிரச்சனை இதில் முக்கியம் பெற்றிருந்தன.




சமகால ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் போக்குகள் குறித்து, விளக்கம் அளித்ததோடு, அவர்களால் அடையாளப்படுத்தப்பட்ட பிரச்சனைகளை அறிக்கையிடுவது சம்பந்தமாக அவர்களோடு கலந்துரையாடப்பட்டது. 

ஊடகங்களின் உரிமையாண்மை பற்றியும், அதனுடைய பின்புலம் பற்றியும் இங்கு தெளிவூட்டப்பட்டன.


எழுத்தாணி கலைப் பேரவையின் தலைவர் வடமலை ராஜ்குமார், சிரேஷ்ட ஊடகவியலாளரும், ஊடகக் கல்வி ஆசிரியருமான கியாஸ் ஷாபி, ஊடகவியலாளர்களான எம்.சி.எம்.அஸ்வர், ராஜீ, நிகிந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.



 





Post a Comment

Previous Post Next Post