https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-1333471348635815 பிரச்சினைகளை இனங்காணல்; அறிவூட்டல் செயலமர்வு.

பிரச்சினைகளை இனங்காணல்; அறிவூட்டல் செயலமர்வு.

 


ஊடகவியலாளர்களுக்கும் சிவில் சமூக பிரதிநிதிகளுக்கும் இடையே தொடர்பாடலை அதிகரிக்கும் அறிவூட்டல் செயலமர்வு ஒன்று திருகோணமலையில் கடந்த 10,11 ஆகிய இரு நாட்களும் இடம் பெற்றது.



பொதுமக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை வெளிக்கொணர்தல் செயற்றிட்டத்தின் இன்னுமொரு நடவடிக்கையாக, திருகோணமலை எழுத்தாணி அமைப்பினால் இச்செயலமர்வு முன்னெடுக்கப்படுகிறது. 



செமலமர்வின் வளவாளராக விடிவெள்ளி பத்திரிகையின் பிரதம ஆசிரியரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான எம்.பீ.எம்.பைரூஸ் கலந்துகொண்டு தெளிவூட்டல்களை வழங்கினார்.


 

எழுத்தாணி அமைப்பின் தலைவர் வடமலை ராஜ்குமார் மற்றும் பொருளாளர் அரசரத்தினம் அச்சுதன் ஆகியோருடன் அமைப்பின் திட்ட ஆலோசகர் சுபாஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.




இந்தச் செயலமர்வில் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் ஊடகவியலாளர்கள் மற்றும் பெண் ஊடகவிலாளர் என 20 ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டனர்.



இச் செயலமர்வைத் தொடரந்து சிவில் சமூக அமைப்புக்களுடனான அமர்வுகள் இடம்பெறவுள்ளதாக எழுத்தாணி அமைப்பின் தலைவர் தெரிவித்தனர்.








Post a Comment

Previous Post Next Post