கிண்ணியா கல்வி வலயத்துக்குட்பட்ட மாகாண பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்களுக்கு 2023 ஆம் ஆண்டுக்கான வருடாந்த இடமாற்றத்துக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இடமாற்றம் பெற விரும்பும் ஆசிரியர்கள், அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களை பூரணப்படுத்தி 2022.12.20 ஆம் தேதிக்கு முன்னர் வலைய கல்வி அலுவலகத்துக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக சகல பாடசாலை அதிபர்களுக்கும் வலயக் கல்விப் பணிப்பாளரினால், கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
இலங்கை ஆசிரியர் சேவை சேர்ந்த உத்தியோகத்தர் குறித்த பாடசாலையில், குறைந்தபட்சம் 5 வருடங்கள் அல்லது அதற்கு மேல் சேவையாற்றி இருப்பின் வருடாந்த இடமாற்றத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
ஒரே பாடசாலையில் தொடர்ச்சியாக 5 வருட காலம் சேவையை பூர்த்தி செய்த சகல ஆசிரியர்களும் வருடாந்த இடமாற்றத்துக்கு உட்பட்டவர்கள் ஆவர்.
ஐந்து வருட சேவை காலத்தை நிறைவு செய்த ஆசிரியர்கள் விடமாட்டத்திற்கு விண்ணப்பிக்காமை தெரிய வந்தால் அத்தகைய ஆசிரியர்களுக்கு வெற்றிடமுள்ள ஏதேனும் ஒரு பாடசாலைக்கு இடமாற்றம் வழங்கப்படும்.
விண்ணப்பதாரியினால் கோரப்பட்ட பாடசாலைக்கு இடமாற்றம் வழங்க முயற்சி எடுக்கப்படும். எனினும் அவ்வாறு வழங்க முடியாது போனால் வேறு ஒரு வெற்றிடம் உள்ள பாடசாலையை இடமாற்ற சபை தீர்மானிக்கும்.
58 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் அவர்களது கோரிக்கையின்றி, இடமாற்றம் செய்யப்படமாட்டார்கள்.
பாடரீதியாக அனுமதிக்கப்பட்ட ஆளணி எண்ணிக்கைக்கு மேலதிகமான ஆளணியை கொண்டுள்ள பாடசாலைகளுக்கு பதிலீடு வழங்கப்படமாட்டாது. ஆயினும் மேலதிக ஆசிரியர் கற்பிக்கும் பாடத்தில் வெற்றிடம் நிலவினால் அப் பாடசாலை மாணவர்களின் நலன் கருதி தீர்மானம் எடுக்கப்படும்.
நிரந்தர வதிவிடத்திலிருந்து ஐந்து கிலோ மீட்டருக்குள் கடமையாற்றிய ஒரு ஆசிரியர், அதற்கு அப்பால் உள்ள பாடசாலைக்கு இடமாற்றம் வழங்க பரிசீலிக்கப்படுவார்.
ஒரு பாடசாலையின் மேலதிக ஆளணி என்பது பாடரீதியாக அங்கீகரிக்கப்பட்ட எண்ணிக்கையினரை விட மேலதிகமாக இருப்பதாகும் . மேலதிக ஆசிரியரை இடமாற்றும் போது செயலாற்றுகையில் குறைந்து இருப்பவர் கவனத்தில் கொள்ளப்படுவர்.
நியமன கடிதத்தில் கட்டாய சேவை காலம் குறிப்பிடப்பட்டிருந்தால் அக்காலத்தை பூர்த்தி செய்யாத விண்ணப்பத்தாரிகள் இடமாற்றத்திற்காக பரிசீலிமாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
.png)
Post a Comment