டெங்கு நுளம்புகளை அழிக்கின்ற மருந்துகளுக்கு தட்டுப்பாடு; நிலவுவதால்,பொதுமக்களே அவதானத்துடன் இருக்க வேண்டும் - கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி
கிண்ணியா பிரதேசத்தில் கடந்த ஆண்டு 50 டெங்கு நோயளர்கள் அடையாளம் காணப்பட்ட அதேவேளை, இந்த ஆண்டு, 118 டெங்கு நோயளர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கிறார்கள். இந்த நிலை பொதுமக்களை விழிப்புடன் இருக்குமாறு எச்சரிக்கை செய்திருக்கிறது என கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம்.ரிஸ்வி தெரிவித்தார்.
கிண்ணியா பெரியாற்றுமுனை பிரதேசத்தில் டெங்கு ஒழிப்புக்கான விழிப்புணர்வு வேலைத் திட்டம் ஒன்றுநேற்று (17) ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன் போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து அங்கு உரையாற்றுகையில், இந்த ஆண்டு டெங்கு மரணம் ஒன்றும் ஏற்பட்டிருப்பது துரதிஷ்டவசமானது. இந்த நிலையில், எதிர்வரும் ஆண்டு டெங்கு நோயினை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் நாங்கள் கொண்டு வர வேண்டும். இதற்காகவே கடும் முயற்சியில் நாங்கள் இப்போது இறங்கி இருக்கிறோம். கிண்ணியா சுகாதார வைத்திய அலுவலகமும் பள்ளிவாசல்கள் சமாஜமும் இணைந்து இந்த டெங்கு நோய் கட்டுப்பாட்டு வேலை திட்டத்தை முன்னெடுத்து இருக்கிறோம்.
இதற்காக பொலீஸ் உத்தியோகத்தர்களும், எமது சுகாதாரப் பணியாளர்களும் பொதுமக்களோடு இணைந்து, பத்து பிரிவுகளாக களத்தில் இறங்கி இருக்கிறார்கள்.
இப்போது நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற பொருளாதாரப் காரணமாக டெங்கு குடம்பிகளை அழிக்கின்ற மருந்து பொருட்கள் எதுவும் சுகாதார அமைச்சிடமிருந்து கடந்த ஒரு வருட காலமாக எமக்கு கிடைக்கவில்லை. இந்த நிலையில் டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கு பொதுமக்களின் பூரணமான முழுமையான ஒத்துழைப்பு அவசியமும் அவசரமாகவும் தேவைப்படுகின்றது.
எனவேதான், மக்கள் வாழ்கின்ற இடத்தின் உட்புறமும் வெளிப்புறமும் நீர் தேங்கி நிற்காதபடி, அவற்றை பாதுகாக்க வேண்டும் என உங்களிடம் வினயமாக கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார்.





Post a Comment