சர்வதேச எழுத்தறிவு தினத்தையொட்டி திருகோணமலை வலய கல்வி அலுவலக பிரிக்குட்பட்ட பாடசாலை மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வுப் பேரணி ஒன்று நேற்று நடைபெற்றது.
கல்வி வலய முறைசாராப் பிரிவின் ஏற்பாட்டில், வலயக்கல்விப் பணிப்பாளர் சிவானந்தம் சிறீதரன் தலைமையில் குறித்த பேரணி நடைபெற்றது.
இன்றைய நவீன உலகின் சவால்களை எதிர்கொள்ளத்தக்க வகையில் நிலைபேரான கல்வி அபிவிருத்தியினை நோக்கிய மாணவர் சமுதாயத்தைக் கட்டியெழுப்புவோம் என்னும் தொனிப் பொருளில் இந்த நடைபவணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இவ் விழிப்புணர்வுப் பேரணியில் தி/தி/ மாதுமை அம்பாள் வித்தியாலயம், தி/தி/ செல்வநாயகபுரம் இந்து மகா வித்தியாலயம் மற்றும் தி/ தி/ பாரதி தமிழ் வித்தியாலயம் போன்ற பாடசாலைகள் கலந்து கொண்டன.
ஊர்வலமும், ஒன்று கூடலும் நடைபெற்றதுடன், ஏனைய வலயப் பாடசாலைகள் வலயக்கல்விப் பணிப்பாளரின் அறிவுறுத்தலுக்கு
அமைவாகத் தத்தமது பகுதிகளில் குறித்த விழிப்புணர்வுப் பேரணியினை நடாத்தியதுடன் குறித்த தருணம் எழுத்தறிவின் அவசியத்தை வலியுறுத்தும் துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டிருந்தது.
இதன்போது ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment