https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-1333471348635815 கிண்ணியாவில் ஐஸ் போதைப் பொருளுடன் குடும்பஸ்தர் கைது.

கிண்ணியாவில் ஐஸ் போதைப் பொருளுடன் குடும்பஸ்தர் கைது.

 



கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, நடுஊற்று பகுதியில் ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த குடும்பஸ்தர் ஒருவரை திருகோணமலை பிராந்திய போதை பொருள் தடுப்பு பிரிவினர் நேற்று(12) காலை கைது செய்துள்ளனர், 


கைதான நபர்களிடம் இருந்து 7.041 கிராம் நிறை கொண்ட ஐஸ் போதை பொருள் பொதி கைப்பற்றப்பட்டதாகவும், சந்தேக நபர், கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார் எனவும் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர்.


கிண்ணியா, நடுஊற்று, தாயிப் நகர், சுனாமி வீட்டுத்திதிட்ட பகுதியைச் சேர்ந்த 35 வயதான குடும்பஸ்தரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்.


இவர் நீண்ட காலமாக போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வருபவர் என விசாரணையின் போது தெரியவந்துள்ளதாகவும், இது தொடர்பாக மேலதிக விசாரணைகள முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Post a Comment

Previous Post Next Post