(கிண்ணியா ஆதில்)
தேசிய பொலிஸ் வாரத்தையொட்டி திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலையத்தில் நேற்று(6) இரத்ததான முகாம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கிண்ணியா சேவிங் ஹியூமினிட்டி பவுண்டேஷன் அனுசரணையுடன் இந்த நிகழ்வு இடம் பெற்றது.
இதன் போது திருகோணமலை தலைமை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த 50 போலீஸ் அதிகாரிகளும் ஏனைய சிவில் உத்தியோகத்தர்களும் இரத்த தானம் செய்தனர்.
இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட உதவிபொலிஸ் அத்தியேட்சகர், சேவிங் ஹியூமினிட்டி பவுண்டேஷன் நிறைவேற்று பிரதம அதிகாரி மற்றும் வைத்தியசாலை ஊழியர்கள் பலரும் கலந்து கொண்டனர்






Post a Comment