கிண்ணியா பிரதேச பாடசாலைகளில் சிறுவர் பாதுகாப்பு குழுக்களை வலுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கிண்ணியா பிரதேச செயலகத்தின் அனுசரணையுடன் கிண்ணியா வலயக்கல்வி அலுவலகப் பிரிவுக்குட்பட்ட ஐந்து பாடசாலைகள் இதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளன.
இதன் முதற்கட்டமாக கிண்ணியா அலிகார் மகா வித்தியாலய சிறுவர் பாதுகாப்பு குழுவை வலுப்படுத்தும் நடவடிக்கை இன்று(5) பாடசாலை அதிபர் எம். எஸ். அஹமட் ராஜி தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது பாடசாலை சிறுவர் பாதுகாப்பு குழுவுக்காக அங்கத்தவர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள்.
தலைவராக எம். ஏ. எம். ஆதில் (12), உப தலைவராக எஸ். எம். பாசில் (11), செயலாளராக எம். எஃப். முனீரா(12 ), உப செயலாளராக எம்.ஏ.எப் அஹ்பிரின் (12), பொருளாளராக ஆர். எம். முபீன் அகமட் (12), நிர்வாக குழு உறுப்பினர்களாக ஆர். எம். ரபாஸ்(12), ஐ. எம். ராசித்(11), யு. எம். நஜாத்(11), எம். எஃப். சஹ்னாஸ்(11), யூ.ஏ. இஸ்சத் நுகா (11), எப்.பவ்மிசா (10) ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிகழ்வில் வலையக் கல்வி அலுவலக சிறுவர் பாதுகாப்பு பிரிவு உதவிக் கல்விப் பணிப்பாளர்
எஸ். நளீர், கிண்ணியா பிரதேச செயலக சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் எம். எஸ். கஸ்மி ஆகியோர் கலந்து கொண்டனர்.



Post a Comment