ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60 ஆகக் குறைக்க தீர்மானிக்கப்பட்டாலும் தேர்ந்தெடுக்கப்பட்ட சில அத்தியாவசிய தொழில்களுக்கு அதிலிருந்து விடுவிப்பு வழங்குவதற்கு யோசனைகள் முன்வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
மருத்துவம், தாதியர், பொறியியல் ஆகிய துறைகளுக்கு இந்த வரம்பிலிருந்து நீக்கப்படும் என்று பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பி. கே. மாயாதுன்னே தெரிவித்துள்ளார்.
இவர்களுக்கு 63 வயது வரை பணியாற்றக்கூடிய வகையில் அமைச்சரவை திருத்தங்கள் கொண்டுவரப்பட உள்ளதாகவும் ஏனைய குழுவின டிசம்பர் 31 ஆம் தேதி ஓய்வு பெற உள்ளதாகவும் தெரிவித்த மாயா துன்னே, இது தொடர்பான சுற்றறிக்கை எதிர்வரும் 15 நாட்களுக்குள் வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளார் .
அதன்படி இந்த ஆண்டு இறுதியில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஓய்வு பெற உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment