(கந்தளாய் யூசுப்)
திருகோணமலை மாவட்டத்தில் கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பேராறு பகுதியில் அண்மைக்காலமாக கும்பலொன்று மாடு மற்றும் கோழிகளை களவாடி வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த திருட்டு கும்பல் பேராறு அணைக்கட்டு, ரஜஎல மற்றும் மதுரசா நகர் போன்ற பல இடங்களில் மக்கள் அசதியாக தூங்கும்போது தங்கள் கைவரிசையை காட்டி வருவதாகவும் தெரியவந்துள்ளது .
குறித்த திருட்டு கும்பல் நேற்று முன்தினம் ஒரே இரவில் பத்தொம்பதுக்கும் மேற்பட்ட கோழிகளை திருடி உள்ளானர்.
இந்த திருட்டு சம்பவத்துக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment