2021 ஆண்டு பல்கலைக்கழக நுழைவுத் தகுதி பெற்ற மாணவர்களுக்கான
வழிகாட்டல் நிகழ்வு ஒன்று நேற்று கிண்ணியா மத்திய கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.
கிண்ணியா வலயக்கல்வி அலுவலகத்தின் ஆலோசனை வழிகாட்டல் பிரிவினால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
துறைவாரியான பல்கலைக்கழக கற்கை நெறிகள் மற்றும் ஆன்லைன் (Online) இல் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட தேவையான வழிகாட்டல்கள் இதன் போது வழங்கப்பட்டன.
இதில் 170 மாணவர்கள் கலந்து, அனுகூலங்களைப் பெற்றுக் கொண்டனர்.
கிண்ணியா வலயக்கல்வி பணிப்பாளர்
ஏ.நசூஹர்கான், பிரதிக் கல்விப் பணிப்பாளர் செய்யிட் அஹமட், அதிபர் எம்.எஸ்.நசூருத்தீன், கணினி வளநிலைய முகாமையாளர், ஜே.இம்தியாஸ், விஞ்ஞான உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.நிஜாம்டீன், தொழில் வழிகாட்டல் ஆலோசகர் அஷீஸ், வளவாளர் Y.ராசிக் பரீட் ஆகியோர் மாணவர்களுக்கான வழிகாட்டல் ஆலோசனைகளை வழங்கினர்.


Post a Comment