https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-1333471348635815 காலஞ்சென்ற ஊடகவியலாளருக்கு உயரிய விருது வழங்கி கௌரவிப்பு.

காலஞ்சென்ற ஊடகவியலாளருக்கு உயரிய விருது வழங்கி கௌரவிப்பு.

 


(கியாஸ் ஷாபி)


36 வருடங்களாக ஊடகத்துறையில் பணியாற்றிய மறைந்த கந்தளாய் ஊடகவியலாளர் கே.டி.விஜேபால அவர்களுக்கு திருகோணமலை மாவட்ட கங்கத்தலாவ ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தினால் வழங்கப்படும் உயரிய விருதான "கோனாதொட்ட ஊடக அபிமான்" விருது இன்று (06) வழங்கி கௌரவிக்கப்பட்டது.


கந்தளாய் பிரதேச கல்விப் பணிப்பாளர் ஈ.ஜி.பிரபாஸ் தர்மதிலகவினால் இந்த விருதினை விஜேபாலவின் மனைவி திருமதி.எச்.டி.சோமவதிக்கு கந்தளாய் மத்திய மகா வித்தியாலயத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.



இதன் போது, “அதிபராக செயற்பட்ட விஜேபால” என்ற தொனிப்பொருளில் அதிபர்கள் சங்கத்தின் தலைவர் திரு.லக்பிரிய பண்டாரவும், “நட்புமிக்க ஊடகவியலாளர் விஜேபால” என்ற தலைப்பில் ஊடகவியலாளர் சுகத் விஜேகுமாரவும், உரையாற்றினர் .


மறைந்த ஊடகவியலாளரின் மூன்று பிள்ளைகளும் அவரது நினைவாக இரு பாடசாலை நூலகத்திற்கு புத்தகங்களை வழங்கி வைத்தனர். மேலும் விஜேபாலவின் சேவையை பாராட்டி வாசிக்கப்பட்ட கவிதையை ஊடகவியலாளர் சங்கத்தின் அமைப்பாளர் சிரேஷ்ட ஊடகவியலாளர் கியாஸ் ஷாபியினால் வழங்கி வைக்கப்பட்டது.




இந்நிகழ்வில் கல்வி அதிகாரிகள் மற்றும் மற்றும் பல்வேறு சமூக அமைப்பின் உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர்.

Post a Comment

Previous Post Next Post