(கிண்ணியா ஆதில்)
கண்டி மாவட்டத்தின் நாவலப்பிட்டி பிரதேசத்தில் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட 600 குடும்பங்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொதிகள் நேற்று(6) வழங்கி வைக்கப்பட்டன.
திருகோணமலை அரசாங்க அதிபர் பி.எச்.என். ஜெயவிக்ரமவின் வேண்டுகோளுக்கினங்க , திருகோணமலை மாவட்டத்தில் இயங்கிவரும் அரச சார்பற்ற நிறுவனமான Global Ehsan Relief இதனை வழங்கி வைத்தது.
கண்டி அரசாங்க அதிபர் சந்தன தென்னகோன், நாவலப்பிட்டி பிரதேச செயலாளர் சமீர நுவன் ரத்நாயக்க, காணி அதிகாரி ஷிரந்த உதயகுமார மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோரின் முன்னிலையில் இந்த நிவாரணப் பணிகள் வெற்றிகரமாக இடம்பெற்றன.
![]() |






Post a Comment