https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-1333471348635815 திருகோணமலையில் கல்விக்கு உயிர் கொடுக்கும் இருபெரும் சேவைகள்!

திருகோணமலையில் கல்விக்கு உயிர் கொடுக்கும் இருபெரும் சேவைகள்!




(கியாஸ் ஷாபி) 


நாட்டில் இன்று ஏற்பட்டிருக்கின்ற பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில், மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் ஆகியோரின் நலன் கருதி, திருகோணமலை வலய கல்வி அலுவலகம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.   


எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பெற்றார்கள் தங்கள் பிள்ளைகளின் பரீட்சை புள்ளிகள், பாடசாலை மட்ட கணிப்பீட்டு புள்ளிகள் மற்றும் ஏனைய தகவல்களை அறிந்து கொள்வதற்கு பாடசாலைக்குச் செல்ல முடியாத ஒரு இக்கட்டான நிலையில் நாடு பூராவும் மக்கள் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கிறார்.


இதற்காக பெற்றார்கள் நேரத்தை ஒதுக்க முடியாது. ஏனெனில் நாட் கணக்கில் எரிபொருளுக்காக தந்தை வரிசையில் காத்திருக்க வேண்டி உள்ளது. தாயோ எரி வாயுக்காகவும் மண்ணெண்ணெய்காகவும் விறகுக்காகவும் வீதி வீதியாய் அலைய வேண்டியிருக்கின்றது.


இதனை கருத்தில் கொண்டு திருகோணமலை வலயக்கல்வி அலுவலகத்தால் பல்வேறு முற்போக்கான வேலை திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.  


இதன் ஓரு கட்டமாக திருகோணமலை வலய கல்வி பிரிவில் பெற்றார்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோரின் நலன் கருதி இரண்டு முக்கிய விடயங்கள் ஜூலை முதலாம் திகதியிலிருந்து ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன.


1.திருகோணமலை வலயக் கல்வி அலுவலக பிரிவுக்குட்பட்ட பாடசாலைகளில் தரம் 3 முதல் 11 வரையில் கற்கும் மாணவர்களின் சுயவிபரங்கள் மற்றும் கற்றல் அடைவு மட்டக் கணிப்பீடுகள் போன்றவைகளை இணையத்தில் தரவேற்றம் செய்யும் , தேர்ச்சி மையக் கணிப்பீட்டிற்கான தரவுத்தள சிஸ்டம் (Competencies Based Assessment -"CBA SYS".) ஆரம்பித்து வைக்கப்பட்டிருக்கின்றது. இதற்கு சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின் அனுசரணை வழங்கியிருக்கின்றது. 


2. சேவை நாடிகள் தமது தேவை நிமிர்த்தம் காரணமாக அலுவலகத்தை நாடி வரும் போது, அவர்களது கோரிக்கைகள் மற்றும் தேவைகள் ஆகியவற்றை விரைவாக இனங்கண்டு உடன் பதில் வழங்கும் முகமாக வலய கல்வி அலுவலகத்தில் விரைவு பதில் வழங்கல் மையம் (Quick respons unit - QRU ) ஒன்றும் திறந்து வைக்கப்பட்டிருக்கின்றது.


இதுகுறித்து திருகோணமலை  வலயக்கல்வி பணிப்பாளர் எஸ். ஸ்ரீதரன் கருத்து தெரிவிக்கும் போது, 


தேர்ச்சி மையக் கணிப்பீட்டிற்கான தரவுத்தள சேவை மூலம் பெற்றார்கள் தங்களுடைய பிள்ளைகளின் முழு விபரங்களையும் தேவையான நேரத்தில் எந்த இடத்தில் இருந்தும் எந்தத் தாமதமும் இன்றியும் உடனடியாக தகவல்களை பெற்றுக்கொள்வதற்கு

இலகுபடுத்தப்பட்டிருக்கின்றது என்று தெரிவித்தார்.


மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், அதிபர் ஆசிரியர்கள் மற்றும் கல்வி சாரா ஊழியர் தங்களது தேவை நிமிர்த்தம் காரணமாக அலுவலகத்தை நாடி வரும் போது, அவர்களது தேவைகளை இனங்கண்டு உடன் பதில் வழங்கும் முகமாக வலய கல்வி அலுவலகத்தில் விரைவுச் சேவை வழங்கல் மைய ஒன்றும் திறந்து வைக்கப்பட்டிருக்கின்றது.


இதன் மூலம் ஆசிரியர்கள் விருப்பத்தோடு தங்களுடைய கற்பித்தல் பணியை மேற்கொள்வதற்கும், வினைத்திறனான பாடசாலை முகாமைத்துவம் ஒன்றை ஏற்படுத்துவதற்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருக்கின்றது என்றும் தெரிவித்தார்.  


கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் H.E.M.W.G. திஸநாயக்க அதிதியாக கலந்து கொண்டு தேர்ச்சி மையக் கணிப்பீடுகளைப் பதியும் தரவுத்தளத்தினை அங்குரார்ப்பணம் செய்ததுடன், அலுவலகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள விரைவு பதில் வழங்கல் மையத்தினையும் ஜூலை மாதம் முதலாம் திகதி உத்தியோகபூர்வமாக திறந்துவைத்தார்.


குறித்த நிகழ்விற்கு பிரதி, உதவிக்கல்விப் பணிப்பாளர்களும் மற்றும் சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்கள், சிறுவர் அபிவிருத்தி நிதியத்தின் திருகோணமலை மாவட்ட உத்தியோகத்தர்கள் போன்றோர்களும் மற்றும் பாடசாலை அதிபர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது




Post a Comment

Previous Post Next Post