https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-1333471348635815 ஜனாதிபதி சிங்கப்பூர் பயணமானார்

ஜனாதிபதி சிங்கப்பூர் பயணமானார்

 


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சற்று முன்னர் மாலை தீவில் இருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்டுச் சென்றுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. 


இவர், இலங்கையில் இருந்து இன்று அதிகாலை இலங்கையில் இருந்து கட்டுநாயக்கா விமான நிலையத்தின் ஊடாக மாலை தீவுக்கு சென்றிருந்தார்.


இது குறித்து விமானப்படையினர் கருத்து தெரிவிக்கும் போது, 


இலங்கையின் அரசியலமைப்பில் நிறைவேற்று ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு இணங்க, தற்போதுள்ள அரசாங்கத்தின் கோரிக்கையின் பேரில், பாதுகாப்பு அமைச்சின் முழு அங்கீகாரத்திற்கு உட்பட்டு, கட்டுநாயக்க விமான நிலையத்திலுள்ள குடிவரவு, சுங்கம் திணைக்களங்களின் அனைத்து சட்டங்களுக்கும் உட்பட்டு, அதிமேதகு ஜனாதிபதி அவரின் பாரியார் மற்றும் இரு பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து மாலைத்தீவிற்கு செல்வதற்கு விமானப்படையின் விமானம் ஒன்று 2022 ஜூலை 13 ஆம் திகதி அதிகாலை வழங்கப்பட்டது என்று விமானப்படை கருத்து தெரிவித்திருந்தது.


இந்த நிலையில், மாலை செய்ய பூச்சென்றிருந்த ஜனாதிபதிக்கு அங்கு இலங்கை மக்கள் கடுமையான தங்களது எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தனர்.


இதனையடுத்து, ஜனாதிபதி அங்கிருந்து இன்று மாலை சிங்கப்பூருக்கு பயணித்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் காணொளி ஒன்றும் பரவியுள்ளது.


குறிப்பு-

காணொளி இணைக்கப்பட்டுள்ளது.





Post a Comment

Previous Post Next Post