(கியாஸ் ஷாபி)
திருகோணமலை மாவட்ட கங்கத்தலாவ ஐக்கிய ஊடகவியலாளர் மன்றத்தின் முதலாம் ஆண்டு நிறைவு விழா இன்று (02) நிலாவெளியில் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் பீ.எச்.என்.ஜெயவிக்ரம தலைமையில் நடைபெற்றது.
இதில் ஒன்றியத்தின் ஆலோசகர் ஆர்.ஜி.தர்மதாச சந்திரசிறி,மாவட்ட செயலாளர், பி.எச்.என்.ஜெயவிக்ரம, மனிதநேய அறக்கட்டளையின் பிரதம நிறைவேற்று அதிகாரி அலப்தீன் மொஹமட் ஆசிக், செய்தி அதிகாரி எஸ்.எம்.ரஷீன் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
மன்றத்தின் ஊடகவியலாளர்களுக்கு உத்தியோகபூர்வ ரிசேட், நினைவுப் பரிசு மற்றும் ஊடக தொலைபேசி டிரக்டரி என்பன வழங்கி வைக்கப்பட்டன.
மன்றத்தின் ஸ்தாபகரான மறைந்த ஊடகவியலாளர் கே.டி.விஜேபால உட்பட மறைந்த அனைத்து ஊடகவியலாளர்களின் நினைவஞ்சலியும் இடம்பெற்றது.
மாவட்ட ஊடகப் பிரிவு செய்தி அதிகாரி எஸ்.எம்.ரஷீன் "அஹம்" மனிதவள நிலையத்தின் பிரதி இணைப்பாளர் ஏ.மதன் கள இணைப்பாளர் எஸ்.அனுஜா, மனிதநேய அறக்கட்டளையின் பிரதம நிறைவேற்று அதிகாரி அலப்தீன் மொஹமட் ஆசிக் கங்கத்தலாவ ஐக்கிய ஊடக மன்றத்தின் தலைவர் எச்.எச்.மகிந்த சேனாரத்ன செயலாளர் மனு சங்க காரியவசம் மற்றும் ஏனைய உறுப்பினர்கள் நிகழ்வில் கலந்து சிறப்பித்தார்கள்.





Post a Comment