https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-1333471348635815 உள்ளூராட்சி அமைச்சின் மேலதிக செயலாளராக திருமதி சசிதேவி ஜலதீபன் நியமனம்.

உள்ளூராட்சி அமைச்சின் மேலதிக செயலாளராக திருமதி சசிதேவி ஜலதீபன் நியமனம்.


திருகோணமலையைச்  சேர்ந்த திருமதி சசிதேவி ஜலதீபன் இலங்கை நிருவாக சேவையின் அதி விசேட தரத்திற்கு தரமுயர்த்தப்பட்டு, பொது நிருவாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் மேலதிக செயலாளராக கடந்த 16ஆம் தேதி நியமிக்கப்பட்டுள்ளார் .


2003ம் ஆண்டு இலங்கை நிருவாக சேவையில் இணைந்து கொண்ட இவர், இவர் திருகோணமலை மாவட்ட பட்டினமும் சூழலும் மற்றும் பொலன்நறுவை மாவட்ட திபுலாகல ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் பிரதேச செயலாளராக கடமையாற்றியவராவார். 


மேலும், தேசிய கொள்கைகள் பொருளாதார அபிவிருத்தி, மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, இளைஞர் விவகார வடக்கு அபிவிருத்தி அமைச்சினதும், நிதி மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறு சீரமைப்பு இராஜாங்க அமைச்சினதும் சிரேஸ்ட உதவிச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளதோடு, கருத்திட்ட முகாமைத்துவ கண்காணிப்பு திணைக்களத்தின் பணிப்பாளராகவும் பதவி வகித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post