https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-1333471348635815 பலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்து, கிண்ணியாவில் மக்கள் எழுச்சி பேரணி!!

பலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்து, கிண்ணியாவில் மக்கள் எழுச்சி பேரணி!!

 



பலஸ்தீன் காசா பிரதேசத்தில் இடம்பெற்று வரும் தாக்குதல்களினால் பல லட்சம் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி பல ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழப்புகளை சந்தித்து வருகின்றார்கள்..



மனிதாபிமானமற்ற இந்தத் தாக்குதலை கண்டித்தும் பலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்து மாபெரும் எழுச்சிப் பேரணியும் துஆ பிரார்த்தனையும் இன்று (3) ஜும்மா தொழுகையின் பின்னர் கிண்ணியாவில் இடம் பெற்றன



கிண்ணியா சிவில் அமைப்புக்களின் ஒன்றியத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில், கிண்ணியாவில் உள்ள சுமார் 50க்கும் மேற்பட்ட ஜூம்மா பள்ளிவாசல்களில் இருந்து, மக்கள் பேரணியாகச் சென்று, கிண்ணியா நகர சபை மைதானத்தில் ஒன்று கூடினர்.



பேரணியின் போது, நிறுத்து... நிறுத்து....யுத்தத்தை நிறுத்து.கொலை செய்யாதே.. கொலை செய்யாதே, திரும்பிப் போ திரும்பிப் போ.....




காஸாவை விட்டு திரும்பி, விழித்தெழு.. விழித்தெழு..அரபுலகமே விழித்தெழு, வைத்தியசாலை தாக்குதல்களை கண்டிக்கின்றோம், தாக்காதே.. தாக்காதே..



அகதி முகாம்களை தாக்காதே, பலாஸ்தீன் பூமி பலஸ்த்தீனுக்கே, இனஅழிப்பை நிறுத்து, மனிதப் படுகொலையை நிறுத்து, அமுல்படுத்து அமுல்படுத்து யுத்தநிறுத்தத்தை அமுல்படுத்து.

 

அரபுலகமே அழுகுரல் கேக்கலியா, பலாஸ்த்தீனத்திற்கு ஆதரவளித்த இலங்கை அரசுக்கு நன்றி, ஐ.நா வின் தீர்மானத்தை உடன்   அமுல்படுத்து, கொல்லாதே.. கொல்லாதே.. குழந்தைகளை கொல்லாதே.



இருக்க இடம் கொடுத்தால் அழிக்க நினைக்கும் தீயவனே அழிந்து போ, வெல்லும் வெல்லும் உண்மை வெல்லும்,தோற்கும் தோற்கும் பொய்கள் தோற்கும், பிரார்த்தனைகளே எமது ஆயுதம், அழியும் அழியும் தீமைகள் அழியும் ஷஹீதுகளே, நீங்கள் வெற்றி பெற்று விட்டீர்கள் போன்ற கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.




மேலும், ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தையும் மீறி, பொது மக்களையும் பெண்களையும் சிறுவர்களையும் கொலை செய்து வருகின்ற, இஸ்ரேலிய பிரதமரை சர்வதேச போர் குற்றவாளியாக பிரகடனப்படுத்த வேண்டும். சர்வதேச சட்ட திட்டங்களுக்கு ஏற்ப, பலஸ்தீன மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். அந்த மக்களின் உயிர் வாழ்வுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் தங்கு தடையின்றி ஏற்படுத்த வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் உள்ளிட்ட பல சர்வதேச அமைப்புக்களுக்கு கோரிக்கை விடுத்து மகஜர்களும் அனுப்பி வைக்கப்பட்டன. 




கிண்ணியா மஜ்லிஸ் சூரா, கிண்ணியா உலமா சபை மற்றும் பள்ளிவாயல்கள் சம்மேளனம் உள்ளிட்ட, 50க்கும் மேற்பட்ட சமூக அமைப்புக்கள் இந்தக் கண்டன பேரணியில் கலந்து கொண்டன.



Post a Comment

Previous Post Next Post