https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-1333471348635815 பிரதேச செயலக ஊழியர்கள் கவனஈர்ப்பு போராட்டம்!

பிரதேச செயலக ஊழியர்கள் கவனஈர்ப்பு போராட்டம்!



மலைபோல் ஏறிவரும் வாழ்க்கைச் செலவை சமாளிப்பதற்காக, அரசாங்கத்திடம் குறைந்தது 20,000 ரூபாய் சம்பள உயர்வு கோரி, கிண்ணியா பிரதேச செயலக ஊழியர்கள் இன்று (30) கவனஈர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.



இதன் போது, எங்களுக்கு மூன்று வேளையும் உண்ண வழியில்லை, குழந்தைகளுக்கு பால்மா கொடுக்க சம்பளம் போதாது, கடமைக்குச் செல்வதற்கு கையில் காசு இல்லை. அரசியல்வாதிகள் கொழும்பில் சுகபோகம் அனுபவிக்கின்றார்கள். ஆனால், மக்களோ இங்கு பட்டினியால் சாவுகிறார்கள், சாதாரண கூலி தொழிலாளியின் நாற் சம்பளம் 3500/= அரச ஊழியரின் நாற் சம்பளம் 1500/=  போன்ற வாசகங்களை ஏந்தியவாறு, இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



கிண்ணியா பிரதேச செயலகத்துக்கு முன்னால் இடம்பெற்ற இந்தக் கவனயீர்ப்பு போராட்டம் சுமார் இரு மணி நேரம் நடைபெற்றது.








Post a Comment

Previous Post Next Post