https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-1333471348635815 புவிச் சரிதவியல் திணைக்களத் தலைவருக்கு எதிராக திருகோணமலையில் மக்கள் ஆர்ப்பாட்டம்.

புவிச் சரிதவியல் திணைக்களத் தலைவருக்கு எதிராக திருகோணமலையில் மக்கள் ஆர்ப்பாட்டம்.

 


 

புவிச் சரிதவியல் திணைக்களத் தலைவருக்கு எதிராக திருகோணமலை வழி பிரதேச செயலகத்துக்கு முன்னால்,  இன்று (17) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.



புல்மோட்டை கொக்கிலாய் பிரதேசம் தொடக்கம் நிலாவளி இக்பால் நகர் வரையான கரையோர பகுதிகளில் கணியமணல் ஆய்வு செய்வதற்காக புவி சரிதவியல் திணைக்களத் தலைவர் தன்னிச்சையாக எடுத்த முடிவை எதிர்த்தே, இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.



இந்த ஆய்வு பணிக்காக மிட் வெஸ்ட் ஹெவி (Midwest heavy sands ) என்ற தனியார் நிறுவனத்தோடு, புவிச் சரிதவியல் திணைக்களத் தலைவர் தன்னிச்சையாக ஒப்பந்தம் செய்திருப்பதாகவும், கனிய மணல் ஆய்வுக்காக, சில தினங்களில் மணல் அகழ்வு நடவடிக்கை நடைபெற இருப்பதாகவும் அதனை உடனடியாக நிறுத்த கோரியே, இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்.


இந்த அகழ்வுப் பணிக்காக 24 கிராம சேவகர் பிரிவுகள் உள்ளடக்கப்பட்டிருப்பதாகவும், இது 64 கிலோமீட்டர் நீளத்தைக் கொண்டிருப்பதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் மேலும் தெரிவித்தனர்.



இதன் போது, தலைவரே தன்னிச்சையான முடிவை நிறுத்து!, அழிக்காத அழிக்காதே! சுற்றுலா துறையை அழிக்காதே! மக்களை வாழ விடு சாகடிக்காதே!, இது உலகை கவர்ந்த சுற்றுலா தளம்!, எங்களை வாழ வைக்கின்ற பிரதேசத்தை அழிக்காதே! அழிக்காதே! போன்ற சுலோகங்களை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 


தென்னமரவாடி தொடக்கம் பெரியகுளம் வரையிலான பிரதேசத்தைச் சேர்ந்த மூவின மக்களும் ஒன்றிணைந்து, இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்

Post a Comment

Previous Post Next Post