எழுத்தாணி கலைப் பேரவையினால் முன்னெடுக்கப்படும் ஊடகவியலாளர்களுக்கும் சிவில் சமூக அமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான புரிந்துணர்வும் தொடர்பாடலையும் ஊக்குவிக்கும் செயற்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு திருகோணமலை அலஸ் தோட்டத்தில் அமைந்துள்ள தனியார் விடுதியில் இடம்பெற்றது.
எழுத்தாணி கலைப் பேரவையின் தலைவர் வடமலை ராஜ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் பி.எச்.என்..ஜயவிக்ரம பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் சிவில் சமூக அமைப்புக்களான மாவட்ட பெண்கள் சமாசத்தின் பிரதிநிதிகள் மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் பிரதிநிதிகள் ஆகியோருடன் உள்ளுரில் ஊடகவியலாளர்களுடன் தொடர்புடைய அரச சாரா நிறுவனங்களின் பிரதிநிதிகள் அரசாங்கத்தின் சமூக மட்ட அமைப்புக்களுடன் நேரடியாக தொடர்பு பட்டு பணியாற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
இத் திட்டத்தின் ஊடகவிகவியலாளர்களுக்கும் சிவில் சமூக அமைப்பினருக்கும் அரச அதிகாரிகளும் இணைந்து பொது மக்கள் எதிர்நோக்கும் உட்கட்டுமான தேவைகள் மற்றும் மனித உரிமை சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பொது தளம் ஒன்றை உருவாக்குவதே இத்திட்டத்தின் நோக்கம் என எழுத்தாணி கலைப் பேரவையின் தலைவர் வடமலை ராஜ்குமாா் தெரிவித்தார்.
.jpg)




Post a Comment