https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-1333471348635815 மாற்றுத் திறனாளிகளுக்கான விவசாய உபகரணங்கள் வழங்கி வைப்பு.

மாற்றுத் திறனாளிகளுக்கான விவசாய உபகரணங்கள் வழங்கி வைப்பு.



திருகோணமலை மாவட்டத்தில் உள்ள விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடும் 35 மாற்றுத் திறனாளிகளுக்கான விவசாய உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு கடந்த செவ்வாயன்று திருகோணமலை நகராட்சி மன்ற மண்டபத்தில் இடம் பெற்றது.

சென்டர் போ. ஆன்டிகப் நிறுவனம் முன்னெடுத்தவரும் இச் செயற்திட்டத்திற்கு அவுஸ்திரேலியன் எய்ட் நிறுவனம் நிதி உதவியினை வழங்கியது.


இந்நிகழ்வுக்கு அவுஸ்திரேலியன் எய்ட் நிறுவன பிரதிநிதிகள் மற்றும் மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் பிரணவன் சென்டர் போ. ஆன்டிகப் நிறுவன பிரதிநிதிகளான திட்ட இணைப்பாளர் சாரங்க குணசேன மற்றும் நிதி முகாமையாளர் கோசல ஆகியோருடன் மாவட்ட உத்தியோகத்தர் வடமலை ராஜ்குமாா் ஆகியோரும் கலந்து கொண்டனர்.


கடந்த மாதம் அவ்வாறு தெரிவு செய்யப்பட்ட 35 பேருக்கான செயற்கை அவயங்களை வழங்கி வைத்து அதனைத் தொடரந்து அவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் பெருமதியான விவசாய நடவடிக்கைகளுக்கான உபகரணங்களையும் வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post