கிண்ணியா அலிகார் மகா வித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்டு விழாவின் பெண்களுக்கான கிரிக்கெட் போட்டியில் சபா இல்லம் 2023 ஆம் ஆண்டுக்கான சம்பியன் கிண்ணத்தை சுவிகரித்துக் கொண்டது.
பாடசாலை மைதானத்தில் நேற்று(26) நடைபெற்ற பெண்களுக்கான ஐந்து ஓவர் கொண்ட மென்பந்து கிரிக்கெட் போட்டியின் முதலாவது சுற்றில் அரபா இல்ல அணியை எதிர்த்தாடிய சபா இல்ல அணி 7 விக்கெட்டுகளால் வெற்றி பெற்று, இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
இறுதிப் போட்டியில், மினா இல்ல அணியை எதிர்த்தாடிய சபா அணி5 விக்கெட்டுகளால், வெற்றி பெற்று, இந்த வருடத்துக்கான சம்பியன் கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது.
போட்டியின் சிறப்பாட்டக்காரராக சபா இல்லத்தைச் சேர்ந்த பாத்திமா கலிமா தெரிவு செய்யப்பட்டார்.



Post a Comment