கிண்ணியா அலிகார் மகா வித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்டு போட்டியில் பெண்களுக்கான எல்லே போட்டியில் அரபா இல்லம் 2023 ஆம் ஆண்டுக்கான சம்பியன் கிண்ணத்தை சுவிகரித்துக் கொண்டது.
பாடசாலை மைதானத்தில் இன்று(26) நடைபெற்ற பெண்களுக்கான எல்லையைப் போட்டி முதலாவது சுற்றில் சபா இல்ல அணியை எதிர்த்தாடிய அரபா இல்ல அணி 5 : 1 என்ற புள்ளி அடிப்படையில், வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் இலகுவாக நுழைந்தது.
இறுதிப் போட்டியில், மினா இல்ல அணியை 1:0 என்ற புள்ளி அடிப்படையில், வெற்றி பெற்று, இந்த வருடத்துக்கான சம்பியன் கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது.
போட்டியின் சிறப்பாட்டக்காரராக அரபா இல்லத்தைச் சேர்ந்த எல். இல்மா தெரிவு செய்யப்பட்டார்.



Post a Comment