https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-1333471348635815 வரிவெட்டு விதிக்கப்பட வில்லை

வரிவெட்டு விதிக்கப்பட வில்லை




இலங்கைத் துறைமுக அதிகார சபை ஊழியர்களுக்கு புதிய வரிக் கொள்கையின் கீழ் இம்மாத சம்பளத்தில் வரிவெட்டு விதிக்கப்பட வில்லை எனத் தெரிய வருகின்றது.  


அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கையின் கீழ் ஒரு இலட்சம் ரூபாவுக்கு மேல் திரட்டிய சம்பளம் பெறும் அனைத்து ஊழியர்களுக்கும் வரி விதிப்பு உள்ளது. இதன்படி அரச அலுவலகங்களில் இந்த சம்பள வகைக்குள் அடங்கும் ஊழியர்களுக்கு இம்மாதச் சம்பளத்தில் வரி கழிக்கப்பட்டுள்ளது.  


எனினும், இலங்கைத்துறை அதிகாரசபை ஊழியர்களுக்கு இவ்வரிக் கழிப்பனவு செய்யப்படவில்லை. உயரமட்ட உத்தரவொன்றின் பிரகாரம் இந்த வரிக்கழிப்பு தவிர்க்கப்பட்டதாக தெரிய வருகின்றது.


இலங்கைத் துறைமுக அதிகாரசபை ஊழியர்கள் சமீபத்தில் இவ்வரி விதிப்புக்கு எதிராக கொழும்பில் பாரிய ஆரப்பட்டம் செய்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post