https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-1333471348635815 கிண்ணியாவில் கத்திக்குத்தி; இருவர் படுகாயம்!!

கிண்ணியாவில் கத்திக்குத்தி; இருவர் படுகாயம்!!




கிண்ணியா சின்னமகாமாறு பிரதேசத்தில், கத்தி குத்துக்கு இலக்கான இருவர் படுகாயங்களுடன் கிண்ணியா தள வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நான்கு பிள்ளைகளின் தாயான காஞ்சா உம்மா (வயது 38) மற்றும் இரண்டு பிள்ளைகளின் தந்தையான கபூர் பவுசூர் (வயது 28) ஆகியோரே இவ்வாறு வெட்டுக் காயங்களுடன் அனுமதிக்கப்பட்டுளனர்.

சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது,

இன்று(26) காலை 9 மணி அளவில் தனது பக்கத்து வீட்டில் உள்ள கபூர் பவுசூர் என்பவர் தன்னைத்தானே கத்தியால் வெட்டுவதற்கு முயற்சித்த போது, அதை அவதானித்துக் கொண்டிருந்த காஞ்சா உம்மா, ஓடி சென்று அதை தடுக்க முற்பட்ட வேளையில், குறித்த பெண்ணயும், அந்த நபர் கத்தியால் தாறுமாறாக வெட்டியதாகவும் அதன் பின்னர் தனது கழுத்தை தானே வெட்டிக்கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெட்டிய நபர் ஒரு மன நோயாளி என்றும் அவர் சில நேரங்களில் கத்தியை கையில் வைத்துக்கொண்டு, தன்னைத் தானே வெட்டுவதற்கு பல தடவைகள் முயற்சித்தவர் என்றும் தெரிய வருகின்றது.

சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post