https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-1333471348635815 ஏ. ஆர். எம். பரீட் அதிபரின் ஆளுமையின் சாட்சியங்கள்!

ஏ. ஆர். எம். பரீட் அதிபரின் ஆளுமையின் சாட்சியங்கள்!


1992 தொடக்கம் 2005 ஆண்டு வரையுமான காலப்பகுதிக்குள் கிண்ணியா அல் அக் அக்ஸா கல்லூரியில் ஆசிரியர்களாகவும் கல்விசாரா ஊழியர்களாகவும் பணியாற்றியோர் ஒன்று கூடிய நிகழ்வொன்று கடந்த டிசம்பர் மாதம் 28ஆம் திகதி அல் இர்ஃபான் மகா வித்தியாலயத்தில் இடம் பெற்றது.




இந்த காலப்பகுதிக்குள் இந்தப் பாடசாலையில் அதிபராக கடமையாற்றிய ஏ.ஆர்.எம். பரீட் அவர்களின், தலைமையின் கீழ்,சேவையாற்றியவர்களே இவ்வாறு ஒன்று கூடினர்.




இவர்கள் தங்களுடைய சேவை காலத்தில் பெற்றுக்கொண்ட பல்வேறு அனுபவங்களை, மற்றவர்களுடன் பரிமாறிக்கொண்டனர்.




இந்த ஒன்றுகூடல் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக யாழ்ப்பாணத்தில் இருந்தும் கொழும்பிலிருந்தும் இரு ஆசிரியர்கள் வருகை தந்தமையானது இந்த நிகழ்வின் விசேட அம்சமாகும்.




அடுத்து, ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் ஒரே பாடசாலையில் பணியாற்றி ஓய்வு பெற்ற மற்றும் தற்போது சேவையில் உள்ள பாடசாலை பணியாளர்கள் கிண்ணியாவில் ஒன்று கூடிய முதல் சந்தர்ப்பம் இதுவே ஆகும்.




இந்த இரண்டு விடயங்களும் அந்தக் காலப்பகுதியில் அதிபராக கடமையாற்றிய ஏ.ஆர்.எம். பரீட் அவர்களின் ஆளுமையின் சாட்சியங்களாகும் என இங்கு உரையாற்றிய பலரும் கருத்து தெரிவித்தனர்.




மேலும், இந்தக் காலப்பகுதி வர்த்தகத்துறை, கலைத்துறை, விளையாட்டுத்துறை மற்றும் பல்வேறு கலை இலக்கியத் துறைகளிலும் அல் அக்ஷா கல்லூரியின் பொற்காலம் எனவும் தெரிவித்து ஆசிரியர்கள் பெருமிதம் அடைந்து கொண்டனர்.














  

Post a Comment

Previous Post Next Post