கிண்ணியா அலிகார் மகா வித்தியாலயத்தில் செயன்முறை ரீதியில் கற்றலுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட கணித முகாம் ஒன்று நேற்று (8) அதிபர் எம். எஸ். அஹமட் ராஜி தலைமையில் நடைபெற்றது.
மாணவர்களுக்கு கணித பாடத்தில் விருப்பத்தையும் ஆர்வத்தை ஏற்படுத்தி , கல்வி பொதுத் தராதர சாதாரண பரீட்சையில் கணித பாட சித்தி வீதத்தை அதிகரிக்கும் நோக்கோடு இந்த கணித முகாம் கணித ஆசிரியர் எம். எஸ்.மெளஜூத் அவர்களின் நெறிப்படுத்தலின் கீழ், ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கணித பாடத்துக்கு பொருத்தமான கற்பித்தல் உபகரணங்களை தயாரிக்கும் முறை, சுழற்சி முறை கணிப்பீடு, வினாவுக்கான விடையைக் கண்டு வடிவத்தினை உருவாக்குவோம், புதையலை தேடல், கணித அஞ்சல் போட்டி, சொல் அமைத்தல், புதிர் போட்டி, மாயச் சதுரம் மற்றும் கணித வினாடி வினா போட்டி ஆகிய நிகழ்வுகள் இடம் பெற்றன.
இந்த நிகழ்வில், அதிதிகளாக குறிஞ்சாக்கேணி கோட்டக்கல்வி அதிகாரி ஆர். நசீம், கணித பாட உதவிக் கல்விப் பணிப்பாளர் எம். எஸ். ஹஸன், ஆசிரியர் ஆலோசகர் எம். எச். எம். அருஸ், பாடசாலை மேம்பாட்டு அபிவிருத்தி இணைப்பாளர் ஏ.எம். ஹிதாயத்துல்லா ஆகியோர் கலந்து கொண்டனர்.





Post a Comment