IHH Belgium நிறுவனத்தின் அனுசரணையுடன் அல்ஹித்மதுல் உம்மா பௌண்டேசனினால் சூரங்கல் மஸ்ஜிதுல் ஆஹிரா ஜும்ஆப்பள்ளியில் சூரங்கல் பிரதேசத்தைச் சேர்ந்த வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு உலர் உணவுப் பொதிகள் வியாழக்கிழமை(13) வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் இப்பொதிகள் IHH belgium நிறுவனத்தின் பிரதிநிதி செய்புள்ளாஹ் கோச் அவர்களினாலும் அல்ஹித்மத்துல் உம்மா பௌண்டேசனின் பணிப்பாளர் கஸ்ஸாலி முகமட் பாத்திஹ் ஆகியோரினால் வழங்கி வைக்கப்பட்டன.
சூரங்கல் பிரதேசமானது கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பின்தங்கிய பிரதேசமாகவும் அதிகமான மக்கள் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற பிரதேசமாகவும் காணப்படுகிறது. வாழ்கைச் செலவு அதிகரித்திருக்கும் தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு இம்மக்களுக்கு வாழ்வாதார உதவிய உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.
அல்ஹித்மதுல் உம்மா பௌண்டேசனினால் பல பிரதேசங்களில் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற மக்களுக்கு இவ்வாறான உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




Post a Comment