சர்வதேச தகவல் அறியும் உரிமைகள் தினம் - செப்டம்பர் 28
சர்வதேச தகவல் அறியும் உரிமைகள் தினத்தையொட்டி கந்தளாய் ஆயிஷா மகா வித்தியாலய மாணவிகளுக்கு நேற்று(26) செயலமர்வொன்று இடம்பெற்றது.
திருகோணமலை மாவட்ட கங்கத்தலாவ ஐக்கிய ஊடகவியலாளர் மன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த செயலமர்வில் தரம் 13 ஐச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர்.
"தகவலும் மனிதனும்", "தகவல் தொடர்பான உரிமைகளும் ஏற்பாடுகளும்" ஆகிய தலைப்புகளில் மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
திருகோணாமலை மாவட்ட செயலக ஊடகப் பிரிவின் தகவல் அதிகாரி எஸ்.எம்.ரசீன், சிரேஷ்ட ஊடகவியலாளரும், ஊடகக் கற்கை ஆசிரியருமான கியாஸ் ஷாபி ஆகியோர் வளவாளர்களாக கலந்து மாணவர்களுக்கு விளக்கமளித்தனர்.
இந்த செயலமர்வில் ஆயிஷா மகா வித்தியாலய அதிபர் எஸ்.சாஹிதீன், கந்தளாய் வலயக்கல்வி பணிமனையின் கோட்டக்கல்வி அதிகாரி எம்.டி.எம். தாரிக், திருகோணமலை மாவட்ட மகளிர் அபிவிருத்தி அமைப்பின் தலைவி எம். நலீமா மற்றும் திருகோணமலை மாவட்ட கங்கத்தலாவே ஐக்கிய ஊடகவியலாளர் மன்றத்தின் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இறுதியாக, இதில் பங்கு பற்றிய மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.











Post a Comment