https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-1333471348635815 திருகோணமலை மாவட்ட எழுத்தாளர்கள் புறக்கணிப்பு.

திருகோணமலை மாவட்ட எழுத்தாளர்கள் புறக்கணிப்பு.



(எப்.முபாரக்)


திருகோணமலை மாவட்ட எழுத்தாளர்களை கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின்  பணிப்பாளர் புறக்கணித்துள்ளதாக  எழுத்தாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.


திருகோணமலை மாவட்டத்தில் உள்ள எழுத்தாளர்களுக்கான செயலமர்வு சனிக்கிழமை (17)கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.


இதில் அதிகமான எழுத்தாளர்களை புறக்கணித்துவிட்டு தமக்கு வேண்டிய பத்து எழுத்தாளர்களை வைத்து செயலமர்வினை அரக்கேற்றியுள்ளதாக பாதிக்கப்பட்ட எழுத்தாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.


திருகோணமலை மாவட்டத்தில் பதினொரு பிரதேச செயலகப் பிரிவுகளையும் உள்ளடக்கி முப்பதிற்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் இருக்கையில் பட்டினமும் சூழலும் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள பத்துப் பேரை தெரிவு செய்து கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் சரண்யா சுதர்சன் செயலமர்வினை மேற்கொண்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்டுள்ள எழுத்தாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.


மேலும் திருகோணமலை மாவட்டத்தில் அதிகமான எழுத்தாளர் கிராமப் புறங்களில் இருப்பதாகவும் திருகோணமலை நகரிலுள்ள தமக்கு வேண்டிய பத்து பேருக்கு செயலமர்வு நடாத்தியுள்ளதாகவும் பாதிக்கப்பட்டுள்ள எழுத்தாளர்கள் தெரிவிக்கின்றனர்.


அத்தோடு இச்செயலமர்வில் முஸ்லிம் எழுத்தாளர்களை கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர்  புறக்கணித்துள்ளதாகவும்,முஸ்லிம் எழுத்தாளர்கள் தெரிவிக்கின்றனர்.


ஊடகவியலாளர்களும் எழுத்து துறையோடு தொடர்பானவர்கள்,தினமும் செய்திகளை தேடி மக்களுக்கு உண்மைத் தன்மைகளை வெளிக்கொண்டு வருபவர்கள்,புத்தகங்கள் எழுதுபவர்களை மாத்திரம் அழைத்து பெறுமதியான செயலமர்வினை பணிப்பாளர் செய்துள்ளதாகவும் பாதிக்கப்பட்டுள்ள எழுத்தாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.



தமிழ் மற்றும் முஸ்லிம் எழுத்தாளர்களுக்கிடையில் குரோத தன்மைகளை ஏற்படுத்த பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின்  பணிப்பாளர் மேற்கொண்டுள்ளதாகவும்,இவ்விடயத்தில் கிழக்கு மாகாண ஆளுனர்  தலையிட்டு இனிவரும் செயலமர்வில் திருகோணமலை மாவட்டத்திலுள்ள தமிழ் முஸ்லிம் எழுத்தாளர்களை இணைத்து செயற்படுத்த வேண்டும் எனவும் பாதிக்கப்பட்டுள்ள எழுத்தாளர்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.


அத்தோடு கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் கடமையாற்றிய முன்னால் பணிப்பாளர்கள் இவ்வாறு தன்னிச்சையான செயற்பாடுகளில் ஈடுபடவில்லையெனவும் பாதிக்கப்பட்டுள்ள எழுத்தாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Post a Comment

Previous Post Next Post