https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-1333471348635815 கிண்ணியாவில் ஹெரோயினுடன் விளையாட்டு பயிற்றுவிப்பாளர் கைது.

கிண்ணியாவில் ஹெரோயினுடன் விளையாட்டு பயிற்றுவிப்பாளர் கைது.


கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்னக் கிண்ணியா, அக்ரம் வீதியில் ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த இளைஞர் திருகோணமலை பிராந்திய போதை பொருள் தடுப்பு பிரிவால் நேற்று (4) கைது செய்யப்பட்டு, பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.


கைதான நபர்களிடம் இருந்து 2.03 கிராம் நிறை கொண்ட ஹெரோயின் பொதி ஒன்று கைப்பற்றப்பட்டதாக போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.


சின்னக் கிண்ணியா அக்ரம் வீதியை சேர்ந்த சேர்ந்த 27 வயதுடைய இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்.


இவர், மூதூர் பிரதேச பாடசாலை ஒன்றில் விளையாட்டு பயிற்றுவிப்பாளராக கடமையாற்றி வருபவர் என்றும், இவருக்கு போதைப் பொருள் பாவிக்கும் பழக்கம் இருப்பதோடு, இவர் நீண்ட காலமாக போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வருபவர் என விசாரணையின் போது தெரியவந்துள்ளதாகவும், இது தொடர்பாக மேலதிக விசாரணைகள முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர் 

Post a Comment

Previous Post Next Post