https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-1333471348635815 திருகோணமலையில் ஆசிரியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைப்பு.

திருகோணமலையில் ஆசிரியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைப்பு.


திருகோணமலை வலய கல்வி அலுவலகப் பிரிவுக்குட்பட்ட ஆசிரியர் பதவி உயர்வுக்கான தடைதாண்டல் பரிட்சையினை நிறைவு செய்த நூறு பேருக்கு நேற்று முன்தினம் (26) சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.



திருகோணமலை ஆசிரியர் தொழில் வாண்மை விருத்தி நிலையத்தில் (தமிழ்) 2022.08.25 அன்று 3(1), 2(1) ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கான EB பரீட்சையினை100 ஆசிரியர்கள் நிறைவு செய்திருந்தனர்.

இந்த நிலையத்தின் முகாமையாளராக கடமையாற்றி வரும் சில்மியா ஆர்பீனின் ஏற்பாட்டில், இந்த சான்றுகள் வழங்கும் நிகழ்வு இடம் பெற்றது.

  

இந்நிகழ்வில் திருகோணமலை வலயக்கல்விப் பணிப்பாளர் சிவானந்தம் சிறீதரன் அதிதியாகக் கலந்து கொண்டு சான்றிதழ்களை வழங்கிவைத்தார்.

இந்த ஆசிரியர்களுக்கு வாண்மை விருத்தி செயற்பாடுகள் வலயக்கல்விப் பணிப்பாளரின் நேரடி கண்காணிப்பின் கீழ், நடைபெற்றது.




உரிய துறைகளில் தேர்ச்சியுள்ள சிறந்த வளவாளர்களைக் கொண்டு 3(1) ஆசிரியர்களுக்கு ஏழு பிரிவுகளில் 21 நாட்கள் பயிற்சியும், 2(1) ஆசிரியர்களுக்கு ஆறு பிரிவுகளில் 18 நாட்கள் பயிற்சியும் மற்றும் பரீட்சையும் ஆசிரியர் தொழில் வாண்மை விருத்தி நிலையத்தில் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment

Previous Post Next Post