https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-1333471348635815 கிண்ணியா சூரா சபையின் ஏற்பாட்டில் "போதை ஒழிப்பு விழிப்புணர்வு செயலமர்வு".

கிண்ணியா சூரா சபையின் ஏற்பாட்டில் "போதை ஒழிப்பு விழிப்புணர்வு செயலமர்வு".

 




கிண்ணியா பிரதேசத்தில் அதிகரித்து வரும் போதைப் பொருள் பாவனையை கட்டுப்படுத்தும் நோக்கில் ஒரு அம்சமாக கிண்ணியா ஜாவா பள்ளிவாயல் நிர்வாக சபையுடன் இணைந்து கிண்ணியா சூரா சபை செயலமர்வு ஒன்றை ஜாவா பள்ளிவாயலில் ஏற்பாடு செய்திருந்தது.

இந்நிகழ்வு நேற்று(27) கிண்ணியா ஜாவா பள்ளிவாயலில் நடைபெற்றது.




இந்த நிகழ்வில் கிண்ணியா உலமா சபை பிரதிநிதிகள் கிண்ணியா பள்ளிவாயில்கள் சம்மேளன தலைவர் பிரதேச செயலாளர் சுகாதார வைத்திய அதிகாரி மனநல வைத்திய அதிகாரி திடீர் மரண விசாரணை அதிகாரி உட்பட பிரதேச இளைஞர்களும் பெற்றோரும் கலந்து பயன்பெற்றனர்...




எமது பிரதேசம் போதையற்ற ஒரு பிரதேசமாக மாற்ற வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது..




இதில் பள்ளி வாயல்கள் முக்கிய பொறுப்பினை ஆற்ற வேண்டியுள்ளது. அந்த வகையில் இந்தத் தொடர் நிகழ்ச்சி ஏனைய மஹல்லாக்களிலும் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சூரா சபையின் தலைவர் ஏ ஆர் எம். பரீட் தெரிவித்தார். 




.

Post a Comment

Previous Post Next Post