திருகோணமலை மாவட்ட கங்கத்தலாவ ஐக்கிய ஊடக ஒன்றியத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் குழுவுடன் "இலங்கையின் சமகால நெருக்கடியும் ஊடகவியலாளர்களின் வகிபாகமும்" என்ற தலைப்பில் Human Economic and Development Centre (EHED) எகெட் கரித்தாஸ் மத்திய நிலையத்தில் நேற்று (23)நடைபெற்றது.
இந்நிலையத்தின் பணிப்பாளர் அருட்தந்தை டன்ஸ்டன் பெட்ரிக் ஜோசப் மற்றும் முன்னாள் மாகாண கலாசார பணிப்பாளர் திரு.டி.டபிள்யூ.உபநந்த வெலிகல ஆகியோர் இந்த செயலமர்வினை நடாத்தினார்கள்.
இந்த நிலையத்தின் இணைப்பாளர் எம்.ஏ.எம்.ரிஸ்மி மொழிபெயர்ப்புப் பணிகளுக்கு உதவியிருந்தார்.இறுதியில் உரையாடல், மற்றும் சிற்றுண்டி உபசரிப்புகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.



Post a Comment